IMSc Outreach

kaNita kAnakam 2022

Mathematics program in Tamil for school children

#

This is the 4th edition of IMSc's outreach program for school students in Tamil.

The workshop is aimed at class XI students.

Activities and Speakers:

#
  • Math in Mobile Messages - by Andrew Thangaraj, Professor, Electrical Engineering, IIT Madras

  • Art and Maths of Origami - by Disha J Kuzhively, Science Communication, IMSc Chennai

  • Untangling a knot, with numbers! - by Vijay Ravikumar, Mathematician and theatre artist

Schedule

#
09:30 - 10:00 பதிவு
10:00 - 10:45 அலைப்பேசி அனுப்பும் செய்திகளில் கணக்கு

ஆண்டூரு தங்கராஜ், பேராசிரியர், மின் பொறியியல், ஐஐடி மெட்ராஸ்

நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தி எவ்வாறு உங்கள் அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசியை சென்றடைகிறது? இதைப் பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? நீங்கள் எந்த மொழியில் குறுஞ்செய்தியை அனுப்பினாலும் அலைபேசிக்கு தெரிந்தது என்னவோ 0, 1 மட்டும்தான். உங்கள் எழுத்துக்களை 0, 1 ஆக மாற்றி உங்கள் அலைபேசி அலைக்கற்றை வழியாக மற்றொரு அலைபேசிக்கு அனுப்புகிறது. அந்த அலைபேசி மீண்டும் எழுத்துக்களாக மாற்றிக் காட்டுகிறது. இதிலுமா கணக்கு இருக்கிறது? ஆம். இருக்கிறது. உதாரணத்திற்கு இதோ ஒன்று. 0, 1 களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டுமா குறைவாக இருக்க வேண்டுமா? குறைவாக இருந்தால் நல்லது. அனுப்பும் செய்தியில் பிழை இல்லாமல் எவ்வாறு இந்த எண்ணிக்கையை குறைப்பது? இதைப்போல் கணக்குகளை இந்த விரிவுரையில் பார்ப்போம்.
10:45 - 11:00 தேநீர்
11:00 - 11:45 பள்ளிப்படிப்புக்குப் பின் உள்ள வாய்ப்புகள்

கலந்துரையாடல் அமர்வு

எஸ். சுந்தர், IMSc
பேரா. ஆண்டூரு தங்கராஜ், ஐஐடி மெட்ராஸ்
பேரா. ஜி. யுவராஜ், மெட்ராஸ் பல்கலைக்கழகம்
திரு. சதீஷ் குமார், ஆய்வு மாணவர், IMSc
11:45 - 13:00 ஓரிகாமி - கலையும் கணிதமும்

திஷா குழிவேலி, அறிவியல் தொடர்பு, IMSc சென்னை

ஒரு சதுர காகிதத்தை படகு, ராக்கெட், பந்து, பூ, தவளை போன்ற பல்வேறு வடிவங்களில் மடிக்கலாம். காகிதத்தை வெட்டாமல், பசையை பயன்படுத்தாமல் அல்லது அளவிடாமல் இதைச் செய்யலாம். முதல் செயல்பாட்டில், மிகவும் பிரபலமான பறவை வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வோம். ஓரிகாமி மடிப்பு வடிவங்களைப் பற்றி அறியவும், தட்டையான மடிப்பு வடிவங்களை உருவாக்கத் தேவையான கணிதத்தை உருவாக்கவும் ஓரிகாமி பறவையைப் பயன்படுத்துவோம். இதற்கு பிறகு ஓரிகாமியின் சில நடைமுறை பயன்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இறுதியாக, விண்கலத்தில் சோலார் பேனல் உருவாக்கப் பயன்படும் ஃப்ளாஷரைத் தயாரிப்போம்.
13:00 - 14:00 மதிய சாப்பாடு
14:00 - 15:30 எண்களை வைத்து முடிச்சை அவிழ்த்தல்!

விஜய் ரவிகுமார், கணிதவியலாளர் மற்றும் நாடகக் கலைஞர்

நீங்கள் முடிச்சுகளை போட்டதுண்டா? காலணியிலுள்ள சிறுகயிறுகளை இழுத்துக் கட்டும்போது? அல்லது பையை மூடுவதற்கு? ஆனால், முடிச்சுகளின் இரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா? ஏற்கனவே உங்களுக்கு நன்கு தெரியும் சில கணிதக் கருத்துகளை போன்று முடிச்சுகளும் இயங்கும். இக்கருத்துகளை புதிய ஒரு பார்வையில் புரிந்துகொள்ள முடிச்சுகள் உதவும்!
15:30 - 16:00 தேநீர்

The program will also be live-streamed on the IMSc YouTube Channel.

#