logo

The Institute of Mathematical Sciences

தமிழில் அறிவியல்: சாதனைகளும் சவால்களும் 2024

ஒருங்கிணைப்பவர்கள்: கணித அறிவியல் நிறுவனம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

May 24 - 25, 20249:30 - 17:30

We are at the brink of the fourth Industrial Revolution, which engenders a knowledge economy and demands a learning society more than ever. Alongside these developments, global challenges like climate change, the resurgence of infectious diseases, and poverty have triggered an existential crisis. As our knowledge of the universe is incomplete and not exhaustive, and our means of knowing are limited by the technology we possess, the conclusions of science are tentative and, at times, even uncertain. Further, as scientific research is a human effort, the social aspect is not entirely eliminated in the work of science. Technology, as it is well-known, is socially shaped and a choice. The explosive expansion of social media, concomitantly with cheap data rate, has enabled rapid social media consumption. It took 38 years for radio to reach 50 million listeners, but in 13 years, television reached 50 million users. The Internet took four years to reach 50 million people. In less than nine months of its founding, Facebook added 100 million users. The user-generated content has given voice and agency, but at the same time, alarmingly, social media has become a source of fake news. The uncertainties and tentativeness of science are often twisted to spread pseudoscience, anti-science and counterfeit assertions. Lacking editorial control, social media amplifies this mis/mal/disinformation.




What is the role of public communication of science and technology in this unprecedented juncture? Where are we, and what are our emerging challenges? Several practitioners have developed programmes that can serve as exemplars or good practices to be adapted and emulated.

We would like to discuss these broad themes with the practitioners, academicians, and institutions involved in public communication of science and technology, particularly in the Tamil region, during the two-day workshop on the theme of "Science communication in Tamil—contemporary challenges and opportunities."

மே 24 - 25, 20249:30 - 17:30

நான்காம் தொழில் புரட்சியின் தருவாயில் நாம் இருக்கிறோம். ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கவேண்டிய தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. இதற்கு மத்தியில், பருவநிலை மாற்றம், தொற்றுநோய்களின் பரவல், மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்கள் நம்முடைய இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரண்டத்தை பற்றிய நம்முடைய அறிவு முழுமையானதல்ல மற்றும் இன்றைய தொழில்நுடபத்தை வைத்து மட்டுமே நம்மால் இயற்கையை ஆராயமுடியும். இதனால் அறிவியல் வெளிபடுத்தும் முடிவுகளும் இறுதியானதல்ல. மேலும், சில நேரங்களில் உறுதியாக ஒன்றை கூறமுடிவதும் இல்லை. மனிதர்கள் இணைந்து முன்னெடுக்கும் ஒரு முயற்சி அறிவியல் ஆய்வு. இதனால், அறிவியல் பணிகளில் சமூக காரணிகளை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடமுடியாது. தொழில்நுட்பமென்பது, சமூகத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் நாம் தேர்ந்தெடுத்துள்ள ஒன்று என்று நாம் அனைவரும் அறிவோம். குறைவான தரவு செலவுகளுடன் இணைந்து சமூக வளைதளங்கள் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் விரிவடைந்துள்ளது, பெருமளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது. 5 கோடி மக்களை அடைய வானொலி 38 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. தொலைக்காட்சி 13 ஆண்டுகள். இணையதளம் நான்கு ஆண்டுகள். முகநூல் கண்டுபிடித்து ஒன்பதே மாசத்தில் 10 கோடி மக்களை அடைந்துள்ளது. தங்கள் கருத்துகளை பகிரும் இடத்தையும் சுயமாக செயல்படும் வாய்ப்பையும் பயனாளர்களுக்கு இது வழங்கினாலும், பொய் செய்திகளுக்கான தளமாகவும் சமூக வளைதளங்கள் மாறியுள்ளன. அறிவியலின் நிச்சியமற்ற தன்மையை திரித்து போலி அறிவியல், பொய்செய்திகளை உண்மையென சொல்வது, அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் ஆகியவை பரப்பப்படுகிறது. கருத்துபதிவில் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இல்லாததால், இந்த பொய்செய்திகள் சமூக வளைதளங்களில் ஊதிப்பெரிதாக்க்கப்படுகின்றன.

முன்பு எப்போதும் பார்த்திராத சவால்கள் உள்ள இத்தருவாயில், அறிவியல் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதன் பங்கு எவ்வாறு இருக்கவேண்டும்? தற்போதைய நிலைமை என்ன, மற்றும் நாம் சந்திக்கப்போகும் சவால்கள் என்னென்ன? பல்வேறு நபர்கள், முன்மாதிரிகளாக இருக்கக்கூடிய செயற்திட்டங்களை அல்லது வழிகாட்டுதல்களை வகுத்துள்ளார்கள். இவற்றை நாம் பயன்படுத்தி பணிபுரியலாம்.

“தமிழில் அறிவியல்: சாதனைகளும் சவால்களும்” என்ற இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், அறிவியல் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் கல்வியலாளர்கள், நிறுவனங்கள், மற்றும் களத்தில் பணிபுரிவர்கள் ஆகியோருடன் மேற்கூறப்பட்ட கருத்துக்களை, குறிப்பாக தமிழ்ச் சூழலில், கலந்துரையாட முற்படுகிறோம்.







Venue | நிகழுமிடம்

Ramanujan Auditorium, IMSc. Direction on Google Maps

Livestream on youtube:

ராமானுஜன் அரங்கம், IMSc. கூகுள் மேப்ஸ்

நேரலை:

Schedule


Friday, 24 May 2024

8:45 - 9:00 Registration
09:00 - 9:30 Inaugural
9:30 - 11:00 Communicating contemporary science

Chair: Shubashree Desikan (IIT Shaastra Magazine) Coordinator: Mo Pandiarajan (Eden School), Bala Vetrivel (Puthiya Thalaimurai TV), Nanmaran Thirunavukkarasu (Writer)

Tea/Coffee
11:30 - 13:00

Accessing knowledge from across world

Chair: Uthra Dorairajan (Professor DG Vaishnav), Coordinator: Narmada Devi (Journalist), Bala Barathi (Writer), Dr. S. Shameem (Principal, DIET Chennai)

Lunch Break
14:00 - 15:00 Ensuring inclusivity and addressing social justice concerns

Chair: Gopi Nainar (Film maker), Coordinator: Mohana (Professor), Narayani Subramaniam (Marine Biologist), Era Natarajan (Writer), Shanti Manohar (Social Activist, Health Services)

Tea/Coffee
15:30 - 17:00 Scientific social responsibility

Chair: Balasubramanian Ramachandran (IMSc ex Director), Coordinator: Niruj Mohan Ramanujam (SCOPE, IIA), Madhurima (Professor, CUTN Thiruvarur), Sanjay Ghosh (Deputy Director, Publication Division, Chennai), D Satyanarayana (Senior Scientist, Deep Sea Technologies, NIOT, MoES),

High Tea


Saturday, 25 May 2024

9:30 - 11:00 Addressing moral, ethical, environmental and equity issues

Chair: Hema Prabha (Professor, IIT Madras), Coordinator: Dinakaran (Professor, Madura College), Adhi Valliyappan (Writer, Hindu Tamil), Deepak Venkatachalam (Suzhal Arivom), Gayatri (Kadal Osai, Radio),

Tea/Coffee
11:30 - 13:00

Challenges of fake news and pseudoscience

Chair: Srikumar (Ariviyal Palagai), Coordinator: Sasikumar (Scientist, ISRO), Prince (periyar Pichu), Dr. Satva Thangarasu (Anaesthesiologist, Writer), Scientific Tamilan (Youtuber)

Lunch Break
14:00 - 15:30 Catching them young

Chair: Umanath (Children's Writer), Coordinator: Chutti Ganeshan (writer), Indumathi D (Professor, IMSc), Sujatha Vallidasan (Journalist, Hindu Tamil), Ramesh Vaidya

Tea/Coffee
16:00 - 17:30 Public Session

Chair: Ramanujam (Professor, APU), Coordinator:Lenin Tamilkovan (Director, Tamilnadu Science and Technology Center), Deepak (Filmmaker), P Kamatchi (Senior Scientist, CSIR-SERC) R Ravikumar (Filmmaker), TV Venkateswaran (Professor, IISER Mohali)

High Tea

Schedule


24 மே 2024

8:45 - 9:00 பதிவு
09:00 - 9:30 வரவேற்பு
9:30 - 11:00 வரவேற்பு | தற்கால அறிவியலை பேசுதல்

Chair: சுபஶ்ரீ தேசிகன் (IIT சாஸ்தரா இதழ்), Coordinator: மோ பாண்டியராஜன் (ஈடன் பள்ளி), பாலவெற்றிவேல் (புதியதலைமுறை), நன்மாறன் திருநாவுக்கரசு (எழுத்தாளர்),

Tea/Coffee
11:30 - 13:00

கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்து சேர்ப்பீர்

Chair: உத்ரா துரைராஜன் (பேராசிரியர், DG வைணவக் கல்லூரி), Coordinator: நர்மதா தேவி (இதழியலாளர்), பால பாரதி (எழுத்தாளர்), Dr. எஸ். ஷமீம் (Principal, DIET சென்னை), சித்தார்த்தன் (AIR (ஓய்வு))

Lunch Break
14:00 - 15:00 ஒன்றிணைந்து வாழ்தலும் சமூகநீதி பிரச்சனைகளை எதிர்கொள்ளுதலும்

Chair: கோபி நயனார் (திரைப்பட இயக்குநர்), Coordinator: மோஹனா (பேராசிரியர் (ஓய்வு), பழனி ஆண்டவர் கல்லூரி), நாராயணி சுப்ரமணியம் (அறிவியலாளர் (கடல்சார் உயிரியியல்)), இரா நடராஜன் (எழுத்தாளர்), சாந்தி மனோகர் (சமூக ஆர்வலர்)

Tea/Coffee
15:30 - 17:00 அறிவியல் நிறுவனங்களின் சமூக பொறுப்புகள்

Chair: பாலசுப்ரமணியன் ராமசந்த்ரன் (ex-இயக்குநர், IMSc), Coordinator: நிரஜ் மோகன் (SCOPE, IIA), மதுரிமா (பேராசிரியர், CUTN திருவாரூர்), சஞ்சய் கோஷ் (இணை இயக்குநர், Publication Division, சென்னை), த.சத்திய நாராயணன் ( மூத்த விஞ்ஞானி, ஆழ்கடல் தொழில்நுட்பங்கள்,தேசிய கடல் தொழில் நுட்ப கழகம், புவி அறிவியல் அமைச்சகம்),

High Tea


25 மே 2024

9:30 - 11:00 அறிவியலில் அறநெறி, சுற்றுச்சூழல், சமவாய்ப்பு சவால்கள்

Chair: ஹேமா பிரபா (பேராசிரியர், IIT மெட்ராஸ்), Coordinator: தினகரன் (பேராசிரியர், மதுரா கல்லூரி), ஆதி வள்ளியப்பன் (இந்து தமிழ்), தீபக் வெங்கடாசலம் (சூழல் அறிவோம்), காயத்ரி (கடல் ஓசை வானொலி),

Tea/Coffee
11:30 - 13:00

பொய் செய்திகளும் போலி அறிவியலும்: நாம் எதிர்கொள்ளும் சவால்கள்

Chair: ஶ்ரீகுமார் (அறிவியல் பலகை), Coordinator: சசிகுமார் (அறிவியலாளர், ISRO), பிரிண்ஸ் (பெரியார் பிஞ்சு), சத்வா தங்கராசு (மருத்துவர், எழுத்தாளர்), Scientific Tamilan (Youtuber)

Lunch Break
14:00 - 15:00 இளையோருக்கு அறிவியல்

Chair: உமாநாத் (எழுத்தாளர்), Coordinator: சுட்டி கணேசன் (எழுத்தாளர்), இந்துமதி (பேராசிரியர், IMSc) சுஜாதா வள்ளிதாசன் (இந்து தமிழ்), ரமேஷ் வைத்யா

Tea/Coffee
15:30 - 17:00 பொது அமர்வு

Chair: ராமானுஜம் (பேராசிரியர், APU), Coordinator: இலெனின் தமிழ்க்கோவன் (இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்), தீபக் (திரைப்பட இயக்குநர்), பி காமாட்சி (மூத்த விஞ்ஞானி, CSIR-SERC) ஆர் ரவிக்குமார் (திரைப்பட இயக்குநர்), த.வி. வெங்கடேஸ்வரன் (பேராசிரியர், IISER Mohali)

High Tea

Links to upcoming and past outreach events (including videos, slides and notes) may be found here. For any other queries, email us: outreach@imsc.res.in

நிகழ்ந்து முடிந்த மற்றும் வருங்கால தொடர்பு நிகழ்வுகளை இங்கே காணலாம். வேறேதும் விவரங்களை பெற விரும்பினால், outreach@imsc.res.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.